Suresh - Knowledge Sharing
Follow Suresh on Twitter
 
ராக்ஃபெல்லர்

அமெரிக்காவில் ஒரு சாதாரண விற்பனைப் பிரதிநிதிக்கு மகனாக 1839ம் வருடம் பிறந்தார் ராக்பெல்லர். வறுமையான சூழலில் தொடர்ந்து படிக்க விரும்பமின்றி, தன் 16வது வயதில் ஒரு கமிஷன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து இரண்டு வருடம் கடுமையாக உழைத்தும் சம்பளம் உயரவில்லை. எனவே, ஒரு நண்பருடன் சேர்ந்து தனியே கமிஷன் வியபாரம் தொடங்கினார். ஓஹோவென வியபாரம்

நடந்துகொண்டு இருந்தபோதுதான், அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. எதிர்காலத்தில் எண்ணெய் வியபாரம்தான் பெருகும் வளர்ச்சியடையும் என துல்லியமாகக் கணித்த ராக்ஃபெல்லர், 1863ம் வருடம் அந்தத் தொழிலில் இறங்கினார். “உனக்குப் பணம் சம்பாதிப்பதற்கு ஏன் இவ்வளது ஆசை?” என்று நண்பர்கள் கேட்ட போது, “பணம் சம்பாதிப்பதைவிட, தொழிலில் முதல்வனாக இருக்கவே விரும்புகிறேன். சந்தோஷம் என்பது பணத்தில் இல்லை;  எனக்குக் கிடைக்கும் வெற்றியில் தான் இருக்கிறது!” என்றார். சொன்னது போலவே, தொழிலில் முதல்வனாக இருந்து மிக அதிகமாகப் பணம் சம்பாதித்து, 1910 முதல் 1937 வரை உலகின் பெரும் பணக்காரராகத் திகழ்ந்தார்.

முதல் 50 வருடங்களில் சம்பாதித்த பணத்தை அடுத்து வாழ்ந்த 48 வருடங்களில் நல்ல வழிகளில் செலவிடுவதில் அதிக ஆர்வம் காட்டினார். மருத்துவ ஆராய்ச்சிக்கென ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகம், மருத்துவ சேவைக்கென ராக்ஃபெல்லர் பவுண்டேசன் எனப் பல்பேறு சேவை நிறுவனங்கள் தொடங்கி அமெரிக்காவின் முன்னனேற்றத்திலும் முக்கியப் பங்கு வகித்தார்.

தான் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகச் சம்பாதித்து வெற்றி கண்ட ராக்ஃபெல்லர், 100வயது வரை வாழ வேண்டும் என்கிற தனது ஆசை மட்டும் நிறைவேறாமல், 98 வயதில் மரணம் அடைந்தார்.




Leave a Reply.


Here you can read General Knowledge, Interesting Facts, Tamil, English, Download Tamil books, quiz, play games, read story and much more fun...