Suresh - Knowledge Sharing
Follow Suresh on Twitter
 
பயம்

நெப்போலியன் தனது சிறுவயதில் ராணுவ விடுதியில் தங்கி படித்துக் கொண்டு இருந்தான்.அப்போது அறையில் அவர் கூடத் தங்கியிருந்த மற்றொரு மாணவன் தன்னுடைய அழகானபைய் ஒன்று காணாமல் போய்விட்டதாக மேலதிகாரியிடம் புகார் கூறினான்.

யார்மேலாவது உனக்கு சந்தேகம் உண்டா?” என்றார் மேலதிகாரி. நெப்போலியன் மேல்தான்எனக்கு சந்தேகம்என்றான் அந்த சக மாணவன். உடனே அந்த அதிகாரி நெப்போலியனைதன்னோடு அறைக்கு அழைத்தார். நெப்போலியன் மெதுவாக மேலதிகாரியின் அறைக்குள்நுழைந்தான்.

மேலதிகாரிநெப்போலியனை விசாரிக்காமலேயே தனது கையில் பிரம்பை எடுத்தார். சரம் வாரியாகஅடித்துத் தள்ளினார். நெப்போலியனை ஏன் திருடினாய்? இனி இது மாதிரி தவறுசெய்வாயா?” என்று கேட்டு நல்ல உதை! அவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டுஅமைதியாக இருந்தான் நெப்போலியன். அதற்கு பிறகு கொடுத்த தண்டனையையும்வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தான்.
 
சிறிது நாட்கள் கழித்து புகார் கொடுத்தஅந்த மாணவன் மேலதிகாரியிடம் ஓடிவந்தான். ஐயாஎன்னோட அந்த பையை திருடியதுநெப்போலியன் அல்ல! வேறொரு மாணவன். இப்பொழுதுதான் உண்மை தெரிந்தது.தெரியாமல் நெப்போலியன் மேல் புகார் கொடுத்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்!என்றான்.

அநத அதிகாரிக்கு மிகவும் ஆச்சரியம். உடனே நெப்போலியனை அழைத்தார்.

உனக்குஎன்ன பைத்தியமா? நீ என்ன முட்டாளா? அன்று அந்த அடி அடித்தேன்
அப்பொழுதே உண்மையைச் சொல்ல வேண்டியதுதானே என்றார்”. 

    
நெப்போலியன் அமைதியாகச் சொன்னான்,
ஐயா! நீங்கள் என்னைஅடிப்பதற்கு முன்பாக கேட்டு இருந்தால் நான் சொல்லியிருப்பேன். அடித்துக்கொண்டே கேட்டீர்கள். அப்பொழுது நான் இல்லை என்று சொன்னாலும்அடிக்கு பயந்து நான் அப்படி சொல்வதாக நீங்கள் நினைப்பீர்கள்.

நான் பயந்ததாகயாரும் நினைக்க கூடாது! அதை விட அடிவாங்குவது எனக்கு ஆட்சேபனை இல்லை!”.

சிறுவயதில் இருந்த நெப்போலியனின் அந்த பயமற்ற தைரியம்தான் பின்னாளில் மாபெரும் வெற்றி வீரனாக திகழ்ந்தது.

தான் பயந்ததாகக்கூட யாரும் நினைக்கப்படக்கூடாது என்று நினைத்தால்அது எப்பேர்பட்ட மனோதிடம்”.  

 
Start blogging by creating a new post. You can edit or delete me by clicking under the comments. You can also customize your sidebar by dragging in elements from the top bar.

Here you can read General Knowledge, Interesting Facts, Tamil, English, Download Tamil books, quiz, play games, read story and much more fun...